சினிமாவில் திறமைதான் முக்கியம். நல்ல கலைஞர்களை திரையுலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும் என்றார் ரேணிகுண்டா படத்தின் நாயகன் ஜானி.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் தொடர்பியல் துறை சார்பில் கரிசல் திரைவிழா நேற்று துவங்கியது. இந்த விழா இன்று நிறைவு பெறுகிறது. துணை வேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் ரேணிகுண்டா கதாநாயகன் சக்ரவர்த்தி என்ற ஜானி பேசும்போது, "நான் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் மிகவும் தாமதமாக கல்லூரியில் சேர முயன்றதால் அந்த படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைககவில்லை.
அதன்பிறகு வேறு பாடப்பிரிவில் சேர்ந்து பாதியில் நின்று விட்டேன். எனக்கு கிடைக்காத வாய்ப்பு இந்த பல்கலையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கிடைத்துள்ளது. இதனை அனைவரும் நல்ல முறையி்ல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சினிமாவில் படைப்புதிறன் மிக அவசியம். நிறைய பேரிடம் இந்த திறமை இருந்தாலும் அந்த அளவுக்கு தொழில் நுட்பம் தமி்ழ் திரையுலகில் இல்லை. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் தமிழ் திரையுலகில் புகுந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். என்னை அங்கீகரித்தது போல உங்களையும் தமிழ் திரையுலம் அங்கீகரிக்கும்" என்றார்.
ஜானி இப்போது மீண்டும் ரேணிகுண்டா டீமுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
Related Entertainment News:
Renigunta - Violence In AbundanceCensor Board Passed 'Renigunta''Renigunta' Release Postponed