Home Tamil News National News பத்தே நாளில் ரூ.10 கோடி வருமானம்! ஐயப்பன் மகிமை இது!!
Illinois Institute Of Technology

Latest News:

பத்தே நாளில் ரூ.10 கோடி வருமானம்! ஐயப்பன் மகிமை இது!!

November 25, 2009 12:14:29
பம்பா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ 10 கோடி காணிக்கு குவிந்துள்ளது. இந்த கோயிலின் நடை கடந்த 16 ந் தேதி மண்டல பூஜை விழாவுக்காக திறக்கபட்டது. அன்று முதல் இன்றுவரை சபரிமலை நோக்கி விரதம் இருந்து இருமுடி சுமந்து வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஆண்டைபோல இல்லாமல் இந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கிய நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட அப்பம், அரவணை மற்றும் சபரிமலை பிரசாதங்கள் விற்பனையும், காணிக்கை வசூலும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் சபரிமலை வருமானம் ரூ.7.2 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 9.27 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சபரிமலையில் அரவணை விற்பனை ரூ.3.64 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 4.05 கோடிக்கு விற்பனையானது. ரூ.75 லட்சத்துக்கு அப்பம் விற்பனை நடந்துள்ளது. பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகமாக காணப் படுவதால் அப்பம்,அரவணை வினியோகிக்க கூடுதலாக விற்பனை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. நாளாக ஆக கூட்டம் பெருகியபடி உள்ளதால், மம்டல பூஜை முடியும் தருவாயில் இந்த வருவாய் நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!