ஜக்குபாய் படத்தை நேற்று சக நடிகர்களுடன் பார்த்தார் ரஜினி.
சரத்குமார் - ஸ்ரேயா நடித்துள்ள படம் ஜக்குபாய். இந்தப் படம் திரைக்கு வரும் முன்பே இணையதளங்களில் வெளியாகி, பின்னர் திருட்டு டிவிடியாகவும் வந்தது. ஆனால் அப்போதும் சீண்ட ஆளில்லை இந்தப் படத்தை.
இந்த நேரத்தில், ஜக்குபாய் இணையத்தில் வெளியான விவகாரத்தையே பெரிய பிரச்சினையாக மாற்றினார் சரத்குமார். ரஜினி, கமல் போன்ற பெரிய நட்சத்திரங்களை வரவழைத்து பெரிதாக சீன் போட்டு விளம்பரம் தேடினார்.
திருட்டு டிவிடிக்கு எதிராக குண்டர் சட்டம் பாயும் அளவுக்கு பிரச்சினையை சீரியஸாக்கினார். ஆனால் இந்த படம் இணையத்தில் வெளியாக யார் காரணம், அவர் இந்தப் படத்தின் யூனிட்டைச் சேர்ந்தவர்தானா என்பதை மட்டும் சாமர்த்தியமாக வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டது சரத் அண்ட் கோ.
இப்போது படத்தின் முக்கிய காட்சிகளையெல்லாம் மாற்றிவிட்டதாக கூறி, இன்னும் சில தினங்களில் ஜக்குபாயை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். முதல்வரின் கலைஞர் தொலைக்காட்சி இந்தப் படத்தின் உரிமையை வாங்கியுள்ளது.
இந்த சூழலில், ஜக்குபாய் படத்தின் பிரிமியர் காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. ரஜினி, கமல், வடிவேலு, இயக்குநர் விக்ரமன், தரணி என முன்னணி கலைஞர்கள் திரளாக வந்திருந்தனர் இந்த பிரிமியருக்கு.
படம் பார்க்கும் முன்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர் நிவாரண நிதி உண்டியலில் ஒரு தொகையை அன்பளிப்பாகப் போட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
'இந்தப் படத்தை பார்க்க வந்ததே தண்டம்... இது வேறயா' என்ற முணுமுணுப்புடன் முடிந்தவரை அனைவரும் பணத்தை செலுத்தினர்.
இதைவிட முக்கியம்... படம் எப்படி இருந்தது என்று யாரும் பெரிதாக சொல்லக் கூட முன்வரவில்லை. கலைஞர் டிவி மற்றும் சில இணையதளங்களைச் சேர்ந்தவர்கள்தான் விரட்டி விரட்டி நட்சத்திரங்களிடம் கருத்து கேட்டுப் பெற்றனர்.
-புலிகேசிRelated Entertainment News:
ஜக்குபாய் பார்த்த கருணாநிதி!ஜக்குபாய் டிவிடிகள் பறிமுதல்... 5 பேர் கைது!Jakkubai Music Review - Average Debut