இலங்கை அரசியலில் என் கதை முடிந்துவிட்டது.. என் சகோதரர்களே என் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டனர் என்று புலம்பியுள்ளார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.
இலங்கை அதிபர் தேர்தலில் தனது தோல்வி உறுதியாகிவிட்டது என்றே ராஜபக்சே நம்புகிறாராம். அதற்கேற்ப தமிழர் கட்சிகள் பெரும்பாலானவை ஓரணியில் நின்று பொன்சேகாவை ஆதரித்து வருகின்றன.
இலங்கை மீடியாவோ ஒட்டுமொத்தமாக ராஜபக்சேவை நிராகரிக்க ஆரம்பித்துள்ளன. அவரது ஊழல்களை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட ஆரம்பித்துள்ளன.
சரத் பொன்சேகாவே வெற்றி பெறுவார் என டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட நாளிதழ்கள் தேர்தல் கணிப்பு வெளியிட்டுள்ளன.
இதனால் தொடர்ந்து மது போதையிலேயே அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு ஒரு தெளிவான ஆலோசனை வேண்டி சமீபத்தில், மெதமுலன ராஜமஹா விகாரை என்ற புத்த கோவிலுக்குச் சென்று அங்குள்ள புத்த மதத் தலைவரை சந்தித்துப் புலம்பினாராம்.
'என் கதை முடிந்து விட்டது. எனது சகோதரர்கள் என்னைத் திண்றுவிட்டனர்' என வேதனையுடன் கூறினாராம் மகிந்த ராஜபக்சே.
ராஜபக்சேவின் நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த மதத் தலைவர், அங்கிருந்து பிக்குகளை வெளியேறுமாறு கூறி விட்டு ராஜபக்சேவுடன் தனியாகப் பேசியுள்ளார்.
'பதவிகள் கிடைக்கும், அவை இல்லாமல் போகும். அதுதான் உலக வழக்கம். தற்போது அதிக அளவில் மது அருந்துவதாக கேள்விப்பட்டேன். மது அருந்துவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை. உடல் நலமே கெடும்' என்றும் அறிவுரை கூறினாராம்.
இடையில் சில காலம் மது போதையை விட்டுவிட்டு, புலிகளை வென்ற போதையில் இருந்தாராம் ராஜபக்சே. தற்போது மீண்டும் பிரபாகரன், தம்பிகளின் லஞ்ச ஊழல், தோல்வியின் நிழல் படிந்து வரும் சூழல் போன்ற சிக்கல்கள் அவருக்கு அதிகரித்து வருவதால் மன அழுத்தம் அதிகமாகி, அதை மறக்க மீண்டும் மதுவை அவர் நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Related Srilanka News:
மன நோயால் பாதிக்கப்பட்ட மகிந்த!எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுக் கேட்கும் ராஜபக்சே'ராஜபக்சே கால்பட்டதால்தான் ஆந்திராவுக்கு இவ்வளவு சோதனை!'