Home Tamil News National News இந்தியா இந்தியர்களுக்கு சொந்தம்: தாக்கரேக்கு ராகுல் காந்தி பளீர்


Illinois Institute Of Technology

Latest News:

இந்தியா இந்தியர்களுக்கு சொந்தம்: தாக்கரேக்கு ராகுல் காந்தி பளீர்

February 02, 2010 12:08:10
இந்தியா எந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கும் சொந்தமானதல்ல... அது இந்தியர் அனைவருக்கும் சொந்தமானது என்று கூறியுள்ளார் ராகுல்காந்தி.

மராட்டிய மாநிலத்தில், பீகார்-உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலத்தவர்களுக்கு சிவசேனா மற்றும் மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை முறியடித்த கமாண்டோ வீரர்கள் பலர் பீகார், உ.பி. போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று, சுட்டிக்காட்டினார். பாதுகாப்புக்கு மட்டும் இந்தி பேசும் கமாண்டோக்கள் வேண்டுமா என அவர் காட்டமாகக் கேட்டார்.

இது மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மராட்டியர்களின் தியாகத்தை அவமதிப்பதாக உள்ளது என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி இந்தியர்களுக்கே இந்தியா சொந்தம். இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் சொந்தமானது என்று கூறினார்.

Related National News:

Rahul Gandhi's Train Stoned
ராகுல் பயணித்த ரயில் மீது கல்வீச்சு
Rahul Gandhi Revoked Congress: EVKS Elangovan