Home Tamil News Entertainment News ரஹ்மானுக்கு நான் தீவிர ரசிகன்! - சச்சின் டெண்டுல்கர்


Illinois Institute Of Technology

Latest News:

ரஹ்மானுக்கு நான் தீவிர ரசிகன்! - சச்சின் டெண்டுல்கர்

February 04, 2010 08:40:06

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு நானும் ஒரு தீவிர ரசிகன் என்கிறார் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்.


டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை குறித்து கொல்கத்தாவை சேர்ந்த கவுதம் பட்டாச்சார்யா ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்துக்காக டெண்டுல்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: 
 
பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். இந்த 3 பேரும் என்னை கவர்வதற்கு மும்பையில் இருந்து வந்தது கூட காரணமாக இருக்கலாம்.
 
அவர்களை பல முறை சந்தித்து இருக்கிறேன். நீண்ட காலமாக எப்படி அவர்களால் தொடர்ந்து சாதிக்க முடிகிறது என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். 
 
இதே போல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் அதிகமாக மதிப்பவன் நான். அவரை வியந்து பாராட்டியுள்ளேன். அவரை பார்த்து மிகவும் பெருமை அடைகிறேன்.
 
அவர் ஆஸ்கர் விருது பெற்ற போது நாங்கள் நியூசிலாந்தில் விளையாடி கொண்டிருந்தோம். அங்கிருந்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன்.

லாரா.. என் ஃபேவரிட் வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா மிகச் சிறந்த வீரர். எனக்கு மிகவும் பிடித்தவர். அவரை 1990-ம் ஆண்டு முதன் முதலாக பார்த்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான ரெஸ்ட் ஆப் வேல்டு அணியில் நானும், அவரும் இணைந்து 150 முதல் 160 ரன்கள் வரை எடுத்தோம்.
 
அவரது அனுபவமான ஆட்டத்தை நான் மறு முனையில் இருந்து பார்த்ததை மறக்க இயலாது. நான் எப்போதும் அவரை பின்பற்றியது கிடையாது. ஆனால் அவரது ஆட்டங்களை டெலிவிஷனில் தவறாமல் பார்ப்பேன்...," என்றார்.

Related Entertainment News

SRK's Naughty Sarcasm Tickles Fans

Friendly Ajith And Vijay Awes Fans
AR Rahman @ 'Jai Ho' Live Concert

 
 
Comments
  • Posted by  naresh
    2010-02-07 07:42
    its a big thing from master blaster