Home Tamil News National News இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்குவோம்! - பிரதிபா பட்டீல்


Illinois Institute Of Technology

Latest News:

இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்குவோம்! - பிரதிபா பட்டீல்

January 26, 2010 08:58:49

டெல்லி: இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான நடவடிக்கைகளை உடனே துவங்குவோம் என குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தனது குடியரசு தின உரையில் தெரிவித்தார்.


இந்தியாவின் 61-வது குடியரசு தினம், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. எனவே, குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேற்று உரையாற்றினார். பின்னர், அவருடைய உரை தமிழிலும் மொழி பெயர்ப்பு செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

அவரது குடியரசு தின உரை: 

நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். 21-ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் பரிணாம மாறுதல்களை இந்தியா கண்டிருக்கிறது. உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது. 

நாம் அனைவரும் ஒன்றுபட்ட அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினால் வளர்ந்த, முன்னேறிய நாடாக வார்த்தெடுக்க முடியும்.

இயற்கையுடன் ஒன்றுபட்டு வாழும் சமூகத்தை சேர்ந்த நமக்கு, பருவநிலை மாற்றம் பெரிய சவாலாக உள்ளது. இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலுக்கு ஏற்ற எரிசக்தி தொழில் நுட்பம் மற்றும் புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளங்களை பயன்படுத்தி காற்றில் கார்பன் அளவை குறைக்க வேண்டும்.

உலகெங்கிலும் உணவு தானியங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. உற்பத்தி குறைவாக உள்ள வேளாண் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். அதன் மூலமாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தலாம். அந்த இலக்கை அடைவதற்கு இரண்டாவது பசுமை புரட்சிக்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான சூழ்நிலை முக்கியம். தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து அரசு செயல்படும். கடந்த காலத்தை போலவே எதிர் காலத்திலும் உலக அமைதிக்காக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும். ஒழுங்குடனும், ஒருமுக நோக்கத்துடனும் இந்தியர்கள் அனைவரும் பாடுபடும் காலமாக அடுத்த பத்து ஆண்டுகள் இருக்கும், என்றார் பிரதிபா பட்டீல்.

Related National News

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் குடியரசு தினவிழா ஏற்பாடுகள்...

Republic Day Celebrations At Chennai
Republic Day Rare Photo Gallery