Home Tamil News Entertainment News கலைஞரும் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி: பிரபு
Illinois Institute Of Technology
  

Latest News:

கலைஞரும் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி: பிரபு

December 14, 2009 15:48:36
கலைஞரும் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றவர்கள் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் இன மக்களுக்கு அவர்கள் வாழம் மாவட்டத்திலேயே சாதிச்சான்றிதழ் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதற்காக மூவேந்தர் முன்னேற்றக்கழகம் மற்றும் தேவர் சமுதாய அமைப்புகள் சார்பில் கருணாநிதிக்கு நன்றி பாராட்டுவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் பிரபு,

எனது பெரியப்பா கருணாநிதியின் மனதில் நமக்கு தனி இடம் உண்டு. அவர் மனோகரா உள்ளிட்ட பல திரைப்பட வசனம் மூலம் நமது சமுதாயத்தை உயர்த்தி உள்ளார். அந்த வசனத்தை உச்சரித்த பெருமை நடிகர் திலகம் சிவாஜிக்கு உண்டு. கருணாநிதியும் நடிகர் திலகம் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றவர்கள்.

இப்போது எனது தந்தை இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார். அவருடைய சார்பிலும் எனது குடும்பத்தின் சார்பிலும் முதல் அமைச்சருக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன். எனது பெரியப்பா கருணாநிதியும் அவருடைய குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றார்.

Related Latest Tamil News:

இந்த விழாவை எங்கள் பேரக் குழந்தைகளிடமும் சொல்லி மகிழ்வோம்! - கமல்
எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைக்காத பாக்கியம் எனக்கும் கமலுக்கும் கிடைத்தது! - ரஜினி
Karunanidhi Speech At Award Function
மொழியின் பெயரால் பகை வேண்டாம்... ! - கருணாநிதி