Home Tamil News Entertainment News நயன் - பிரபுதேவா ஆட்டம்... ஆத்திரத்தில் ரம்லத்!


Illinois Institute Of Technology

Latest News:

நயன் - பிரபுதேவா ஆட்டம்... ஆத்திரத்தில் ரம்லத்!

February 09, 2010 02:10:57

தன் கணவர் பிரபுதேவாவுடன் ஒரே மேடையில் நடனம் ஆடிய நயந்தாராவை உதைக்க, வலை வீசி தேடி வருகிறாராம் பிரபுதேவா மனைவி ரம்லத்.

 
சென்னையில் நேற்று முன்தினம் திரையுலகம் சார்பில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஜோடியாக நடனம் ஆடி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். இருவரும் ஆடுவது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நிகழ்ச்சியாக மேடையில் தோன்றினார்கள்.

இருவரையும் மேடையில் பார்த்தவர்கள் சில நொடிகள், அதிர்ச்சியானார்கள். மேற்கத்திய இசைக்கு இருவரும் கைகோர்த்தபடி ஆடி கலக்கினர். இவ்வளவு களேபரத்துக்கு பிறகு இருவரும் துணிச்சலாக சேர்ந்து ஆடியது வியப்பை ஏற்படுத்தியது. 
 
இருவரும் நடனம் ஆடியது பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. பிரபு தேவாவை கடுமையாக கண்டித்தார். இருவருக்கும் தகராறு நடப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நயன்தாராவை உதைக்க வேண்டும் என்ற முடிவோடு, அவர் எங்கு தங்குகிறார் என்று முகவரியை விசாரித்து வருகிறாராம் ரம்லத்.

Related Entertainment News:

Prabhu Deva's Search For Nayan Ends
Prabhu Deva Negates Grapevine With Nayan
Nayanthara Ready To Compromise With Prabhu Deva's Wife