Home Tamil News Sri Lanka News பிரபாகரனைத் தேடும் தமிழ் அமைப்புகள்... அதிர்ச்சியில் இலங்கை
Illinois Institute Of Technology
  

Latest News:

பிரபாகரனைத் தேடும் தமிழ் அமைப்புகள்... அதிர்ச்சியில் இலங்கை

March 10, 2010 15:04:11

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைத் தேடும் முயற்சியில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இத்தகவலை இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவிடம் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

"இலங்கை தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும். எங்கள் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்"' என்று ரோஹித போகொல்லாகம கூறியதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 17-ம் தேதி, வன்னிப் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்நிலையில், மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பொய் சர்வதேச அரங்கில் அம்பலமாகத் தொடங்கியிருப்பதால் பெரும் அதிர்ச்சியில் உள்ளது இலங்கை.

Related Srilanka News:

பிரபாகரன் என்று காட்டப்பட்டது இவருடைய உடலையா?
பிரபாகரன் 'மரண சான்றிதழை' இலங்கை அரசு இதுவரை தரவில்லை!! - சிபிஐ
பிரபாகரன் பாதுகாப்பாக உள்ளார்! - விடுதலைப் புலிகள் அறிவிப்பு