55-வது பிறந்தநாள் காணும் விடுதலைப் புலிகள் தலைவர் வே பிரபாகரனை வாழ்த்தி தமிழகம் முழுக்க பெரிய அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கம் இந்தப் போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டியுள்ளது. ஒவ்வொரு போஸ்டரிலும் ஒட்டியவரின் பெயருடன் மொபைல் நம்பரும் தரப்பட்டுள்ளது. போலீசார் தேவையில்லாத பரபரப்பைக் கிளப்புவார்கள் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
சீமானின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சியிகளில் பிரபாகரன் படங்கள் இடம்பெறுவதற்கு போலீசார் பெரும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். பிரபாகரன் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை வைக்க இப்போதும் போலீசார் அனுமதிப்பதில்லை.
இந்த சூழலில் பிரபாகரன் பிறந்த தினமான நவம்பர் 26 (வியாழன்) -ஐ எழுச்சி தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது நாம் தமிழர் இயக்கம்.