சென்னை: வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கியது. காலையிலேயே வாக்காளர்களைக் கவர லெமன் சாதம் வழங்கப்பட்டது, வெவ்வேறு கட்சி வேட்பாளர்களால்.
மதியம் பிரியாணி வழங்க உறுதியளித்துள்ளனராம்.
இரு தொகுதிகளிலும் காலை நேரத்திலேயே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கத் தயாராகி விட்டனர். வந்தவாசியை விட திருச்செந்தூரில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் 3000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூர் ஆட்கள், சந்தேகத்துக்கிடமானவர்கள் அனைவரும் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் ( தி.மு.க), அம்மன் நாராயணன் ( அ.தி.மு.க), மற்றும் தே.மு.தி.க., சுயேச்சை உள்பட 25 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
காயல்பட்டினம் பகுதியில் காலை 7 மணிக்கெல்லாம் பெண்கள் ஓட்டுச் சாவடி முன் வரிசையில் நின்றிருந்தனர். பலத்த பாதுகாப்புடனும், வீடியோ பதிவுடனும் ஓட்டுப்பதிவு துவங்கியது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் தேர்தல் பார்வையாளர் மீனாகுரியன், கூடுதல் தேர்தல் அலுவலர் ராஜாராமன் மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரசாத், தொகுதி தேர்தல் அதிகாரி துரை ராமச்சந்திரன் ஆகியோர் தொகுதியை கண்காணித்து வருகின்றனர்.
'மந்த'வாசி!வந்தவாசியில் மந்தமாகத் துவங்கிய வாக்குப் பதிவு, இப்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. 10 மணி வாக்கில் வெறும் 11 சதவிகிதம் மட்டுமே பதிவாகி இருந்ததால், பதட்டத்தில் வாக்களிக்க ஆள் சேர்ப்பதில் மும்முரமாக உள்ளன அனைத்து கட்சிகளும்.
வாக்காளர்களுக்கு காலை உணவாக லெமன் சாதம் மற்றும் மதிய உணவாக பிரியாணியும் தொகுதியின் பல பகுதிகளில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
Related Tamil Nadu News:காதல் படுத்தும் பாடு... மூவரை உயிரோடு எரிக்க முயன்ற சென்னை வாலிபர்!கருணாநிதிக்கு 'தமிழ்த் தலைமகன்' விருது: கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் வழங்குகிறது
வெறி வேண்டாம்! -திமுக, அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் அட்வைஸ்!