Home Tamil News Tamil Nadu News ரஞ்சிதா மீது போலீஸில் புகார்!
Illinois Institute Of Technology
  

Latest News:

ரஞ்சிதா மீது போலீஸில் புகார்!

March 06, 2010 08:34:10

நித்யானந்தாவுடன் பாலியல் காட்சிகளில் இடம்பெற்றுள்ள நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


சென்னையில் (வெள்ளிக்கிழமை) காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் சட்ட ஆலோசகர் சிவகுருநாதன்,

"பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா சாமியாருடன், ஆபாச காட்சிகளில் இடம்பெற்றுள்ள நடிகை ரஞ்சிதா மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சிதா மீது பாலியல் வழக்கை பதிவு செய்ய வேண்டும்... நித்யானந்தன் பல லட்சம் மக்களை மோசடி செய்துள்ளார். அந்த மோசடிக்கு முழு உடந்தை ரஞ்சிதா என்ற இந்த நடிகைதான். எனவே சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகை ரஞ்சிதா நடிகர் சங்கத்தில்தான் இருக்கிறார். இதுகுறித்து நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஆபாச காட்சிகளில் ரஞ்சிதா இடம்பெற்றுள்ளது குறித்து அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" என்றார்.

மேலும் இரு புகார்கள்...
 
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை வக்கீல் ராஜலட்சுமி என்பவர் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
நித்யானந்தா, நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிட்டது, பிளஸ்-2 பரீட்சை எழுதும் மாணவ-மாணவிகளை பெரிதும் பாதித்து விட்டது. எதிர்காலத்தில் இது போன்ற ஆபாச காட்சிகளை வெளியிடாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


இதே போல் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் சபீர் என்பவர் கொடுத்த புகாரில், நடிகை ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.


Related TamilNadu News:

நித்தியானந்த சாமி - நடிகை ரஞ்சிதா காம லீலை வீடியோ பரபரப்பு
நித்தியானந்தர் ஆசிரமங்கள் சூறை!
நித்யானந்தம் மீது தமிழகம் - கர்நாடகத்தில் வழக்குகள் பதிவு!
Comments
  • Posted by  kulssekar
    2010-06-05 06:14
    sir, how to download tamil font for sivaji tv.com
  • Posted by  nilam
    2010-03-06 14:15
    Reay my best heroien she is will do like that can not belive my from sri lanka really am very shad about ranjitha why she is did like that becouse of money am very shad promise