Home Tamil News Tamil Nadu News புதிய சட்டசபை வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்!
Illinois Institute Of Technology
  

Latest News:

புதிய சட்டசபை வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்!

March 13, 2010 09:12:41

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை மாலை திறந்து வைக்கிறார். 

இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, தமிழக ஆளுநர் பர்னாலா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில் பங்கேற்பதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி வருகின்றனர். கார் மூலம் இருவரும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தேனீர் அருந்துகின்றனர். பின்னர், விழா நடைபெறும் ஓமந்தூரார் தோட்டத்துக்குச் செல்கின்றனர். மாலை 5 மணியளவில் விழா தொடங்குகிறது.

முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்வதால் விழா நடைபெறும் இடம் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் நான்கு கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய சட்டப் பேரவைக் கட்டடத்தை மன்மோகனும், சோனியாவும் பார்வையிடுகின்றனர். அங்கு, மரக்கன்றுகளை நடுகிறார் பிரதமர்.

பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சட்டப் பேரவையைத் திறந்து வைக்கிறார் பிரதமர். விழா நிறைவடைந்ததும் கார் மூலம் இருவரும் விமான நிலையம் செல்கின்றனர். அங்கியிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகின்றனர்.

ஜொலிக்கும் புதிய சட்டப் பேரவை கட்டடம்!

புதிய சட்டப்பேரவை வளாகம் அழகுடன் காட்சி அளிக்கிறது. கட்டடத்தின் வெளிப்புறம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பேரவையில் பேரவைத் தலைவர் இருக்கை, உறுப்பினர்களுக்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
புதிய சட்டப் பேரவை வளாகத்தில் 'முதல்வர் வளாகம்' என்று அழைக்கப்படக் கூடிய பகுதியின் முன்புறம் நீரூற்றுகளாலும், செயற்கைப் புல்வெளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

விழாப் பந்தலில் 8 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும் என்பதால், தீவுத் திடல், மெரீனா உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, அதன் வழியே திறப்பு விழா நிகழ்ச்சிகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Related Tamil Nadu News
:

புதிய சட்டசபைக் கட்டடத்தின் சிறப்புகள்! - தமிழக அரசு அறிக்கை
புதிய சட்டசபை கட்டிடம்... கருணாநிதிக்கு சோனியா பாராட்டு!
புதிய சட்டசபைக் கட்டடம் திறப்பு... சோனியாவுக்கு முக ஸ்டாலின் நேரில் அழைப்பு