Home Tamil News Tamil Nadu News பொதுத் தேர்வுகள்: மார்ச் 1-ல் ப்ளஸ் டூ, 23-ல் எஸ்எஸ்எல்சி
  

Latest News:

பொதுத் தேர்வுகள்: மார்ச் 1-ல் ப்ளஸ் டூ, 23-ல் எஸ்எஸ்எல்சி

December 17, 2009 16:54:53

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிளஸ்டூ தேர்வு தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 23ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். பிளஸ்-2 தேர்வு அட்டவணை: 2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள். 2 - தமிழ் இரண்டாம் தாள். 4 - ஆங்கிலம் முதல் தாள். 5 - ஆங்கிலம் இரண்டாம் தாள். 8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல் 11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து. 13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல்,நர்சிங்(ஜெனரல்), புள்ளியியல். 15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ் 17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம். 19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம். 22 - வணிகவியல், மனையியல், புவியியல் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை: மார்ச் 23 -தமிழ் முதல்தாள். 24 - தமிழ் இரண்டாம் தாள். 26 - ஆங்கிலம் முதல்தாள். 29 -ஆங்கிலம் இரண்டாம் தாள். ஏப்ரல் 1 - கணிதம். 5 - அறிவியல். 7 - சமூக அறிவியல். மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை: மார்ச் 23 - தமிழ் முதல் தாள் 24 - தமிழ் இரண்டாம் தாள் 25 - ஆங்கிலம் முதல் தாள் 26 - ஆங்கிலம் இரண்டாம் தாள் 29 - கணிதம் முதல் தாள் 30 - கணிதம் இரண்டாம் தாள் ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள் 5 - அறிவியல் இரண்டாம் தாள் 7 - வரலாறு மற்றும் குடிமையியல் 9 - புவியியல் மற்றும் பொருளாதாரம். ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணை: மார்ச் 23 - மொழித்தாள் 25 - ஆங்கிலம் முதல் தாள் 26 - ஆங்கிலம் இரண்டாம் தாள் 29 - கணிதம் முதல் தாள் 30 - கணிதம் இரண்டாம் தாள் ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள் 5 - அறிவியல் இரண்டாம் தாள் 7 - வரலாறு மற்றும் குடிமையியல். 9 - புவியியல் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை: மார்ச் 23 - தமிழ். 24 - மொழித்தாள்-1 சமஸ்கிருதம் மற்றும் அரபி. 26 - ஆங்கிலம் முதல்தாள் 27 - மொழித்தாள்-2 சமஸ்கிருதம் மற்றும் அரபி. 29 - ஆங்கிலம் இரண்டாம் தாள். ஏப்ரல் 1 - கணிதம். 3 - சிறப்பு மொழித்தாள்-3, சமஸ்கிருதம் மற்றும் அரபி. 5 - அறிவியல். 7 - சமூக அறிவியல். தேர்வு நேரம்: பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடைபெறும்.
தேர்வு முடிவுகளை சிவாஜி டிவி இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tamil Nadu News:

போலீசார் அனுமதி மறுத்ததால் கோபத்தில் 1.5 கிமீ நடந்த விஜய்காந்த்!
மழை: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
விஜயகாந்தால் தனது கல்லூரிக்குக் கூட முதல்வராக முடியாது! -நெப்போலியன்