பாகிஸ்தானில் இன்று காலை நடந்த விமான விபத்தில் 114 பேர் உயிரிழந்தனர். 45
பேர் உயிர் பிழைத்துள்ளனர்.இதுவரை 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 'ஏர் ப்ளூ' என்ற தனியார் விமான நிறுவனத்திற்குச்
சொந்த மான பயணிகள் விமானம் துருக்கி நாட்டில் இருந்து கராச்சி நகருக்கு
வந்தது. அங்கிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு பயணிக்கும் வழியில்,
நகருக்கு அருகாமையில் உள்ள மார்கலா மலையில் மோதி வெடித்து சிதறியது. இன்று
காலை சுமார் 6.45 மணியளவில் நடந்த இந்த விபத்து மோசமான வானிலை மற்றும்
கடுமையான பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் 160 பேர் பயணித்திருக்கிறார்கள் என்றும் அவர்களில்
ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 45 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
மீட்புக்குழு இதுவரை இறந்துபோன 60 பேரின் உடல்களை மீட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் நடந்த மிகப் பெரிய விமான விபத்துகளில் இன்று நடந்ததும் ஒன்று என்று கூறப்படுகிறது.
-சிவாஜி டிவி
Latest International News:Air Blue Plane Crash in Pakistan - World News in TamilIndigo
Airlines plane escape from crashIndian
Civil Aviation released new guidelines to pilots - Current News in
India