நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலையில் ஈடுபட்ட நித்தியானந்த சாமியாரின் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இவரது ஆசிரமங்களுக்கு உலகம் முழுக்க கிளைகள் உள்ளன. ஆசிரமங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கெல்லாம் இவருக்கு ஏராளமான பக்தர்களும் உண்டு.
இப்போது சாமியாரின் லீலைகள் வெளியானதும், அந்த ஆசிரமங்களுக்கு முன் குவிந்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர் பக்தர்கள்.
பெங்களூர் பிடாதியில் 200 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது. விஷயம் கேள்விப்பட்ட பக்தர்களும் மக்களும் இந்த ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர். ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ளது நித்யானந்தர் ஆசிரமம். இங்கும் பெரும் கலாட்டாவில் ஈடுபட்டனர் மக்கள். சில உள்ளூர் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நித்யானந்தரை கைது செய்யக் கோரினர்.
சாமியார் இந்த ஆசிரமத்துக்குள் இனி கால் வைக்க முடியாது என்றும், தன்னை குற்றமற்றவர் என நிரூபித்த பிறகே அவரை அனுமதிப்போம் என்றும் கூறினர் அவரது பக்தர்கள்.
மக்களின் கோபத்தைப் பார்த்து பயந்த ஆசிரம ஊழியர்கள் தாங்களே நித்யானந்தரின் படங்களைக் கிழித்தெறிந்தனர்.
கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்து ஆத்திரத்தைக் காட்டினர் மக்கள்.
செங்கம் டிஎஸ்பி தில்லைநாயகம், திருவண்ணாமலை நகர் டிஎஸ்பி வைத்தியலிங்கம் ஆகியோர் ஆசிரமத்துக்கு விரைந்தனர். இவர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஆசிரமத்தை பாதுகாத்து வருகிறது.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகிறது.
புதுச்சேரியில் நித்யானந்தர் ஆசிரமம் சூறைபுதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருள்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருள்களுக்கு தீவைத்தனர்.
கோவையில் கோவையிலும் நித்யானந்தருக்கு ஆசிரமக் கிளைகள் உள்ளன. இங்கும் மக்கள் ரகளையில் ஈடுபட்டனர். சாமியாரின் படங்களை செருப்பால் அடித்து
ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். இதில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் பல இடங்களிலும் பெரும் ரகளை செய்யது துவங்கியுள்ளார்.
Related National News:
நித்தியானந்த சாமி - நடிகை ரஞ்சிதா காம
லீலை வீடியோ பரபரப்புஆந்திர
கவர்னர் மீது அதிர வைக்கும்
செக்ஸ் புகார்!