ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் நினைவு நாளை வீர வணக்க நாளாகக் கடைப்பிடிக்குமாறு பழ நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கை:
ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த முத்துக்குமாரின் முதலாண்டு நினைவு நாள் வருகிற 29-ம் தேதி வரவிருக்கிறது. முத்துக்குமாரின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் 14பேரும் வெளிநாடுகளில் மூன்று பேரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்து அந்நாளில் தமிழகமெங்கும் வீரவணக்க நாள் கடை பிடிக்கும்படி உணர்வுள்ள தமிழர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் ஜனவரி 29-ம் நாள் அன்று முத்துக் குமார் மற்றும் தோழர்களின் நினைவு நாளை கடைப்பிடிக்கும் வகையில் ஊர்வலங்கள் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.
சென்னையில் முத்துக்குமார் வாழ்ந்த கொளத்தூரில் 29ஆம் தேதி மாலை நடைபெறவிருக்கும் வீர வணக்க நாள் கூட்டத்தில் மருத்துவர் ராமதாசு, வைகோ, தா.பாண்டியன் மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related TamilNadu News:
Independence day Special- Na. Muthukumar InterviewPazha Nedumaran Condemns KarunanidhiVaiko Releases Pazha.Karupaiah Books