Home Tamil News National News விலை உயர்வுக்கு பிரதமரும்தான் பொறுப்பு!- சரத் பவார்
  

Latest News:

விலை உயர்வுக்கு பிரதமரும்தான் பொறுப்பு!- சரத் பவார்

January 25, 2010 10:15:17

விலைவாசி உயர்வுக்கு நான் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதற்காக விவசாய அமைச்சர் சரத்பவாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ. கூறியுள்ளது. 

இதற்கு பதில் அளித்து, புனேயில் விவசாயக் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியதாவது:

விலைவாசி உயர்வுக்கு நான் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும். 

இந்த விஷயத்தில் காங்கிரஸ் எனக்கு ஆதரவளிக்கவில்லை என்பது தவறு.  நிபுணர் குழு தெரிவித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றி இந்த பிரச்னையை கையாள வேண்டும். அமைச்சரவையில் எடுக்கும் முடிவைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம். 

எனக்கு  தெரிந்த வரை நம் நாட்டில் உணவு தானியங்கள் பெருமளவில் இருப்பில் உள்ளன. இந்த ஆண்டு முழுவதும் இது போதுமானது.  விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளது," என்றார்.

Related National News:

ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை! அலைமோதும் பெண்கள் கூட்டம்!!
Soaring Prices At H1N1 Testing Labs
Beans Help Reduce Fat In Our Body