லாகூர் தர்காவில் தீவிரவாதத் தற்கொலைப் படையினர் நடத்திய
தாக்குதலுக்குப் பிறகு விழித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அரசு
உள்நாட்டில் இயங்கி வரும் 17 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது.
தீவிரவாதிகளையும், அவர்கள் தொடர்பில் உள்ள இயக்கங்களையும் ஒழிக்க
பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் -இ-முகமது, ஜமாத் -உத்-தவா, லஷ்கர் -இ-ஜாங்வி, சிபா
சகாபா பாகிஸ்தான், பலூசிஸ்தான் விடுதலைப்படை உள்ளிட்ட 17 தீவிரவாத
இயக்களுக்கு பஞ்சாப் உள்துறை தடை விதித்துள்ளது. தீவிரவாதிகளின் கொட்டத்தை
அடக்க அதிரடிப் படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும் அதேசமயத்தில் அவர்களுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் அரசு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு
அமைச்சர் குரேஷி கூறியுள்ளார்.
-சிவாஜி டிவி
Related International News:Mumbai
Is Bolstered With Improved
Anti-Terror Force
Rumour: Terrorist going to attack Mumbai City - India Hot NewsAfghan Taliban Refutes U.S.
Claim