Home Tamil News Sports News ஆயுள்காலத் தடை நீக்கம்.... பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடித்த பல்டி!
Illinois Institute Of Technology
  

Latest News:

ஆயுள்காலத் தடை நீக்கம்.... பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடித்த பல்டி!

March 11, 2010 19:38:25

பாகிஸ்தான் வீரர்கள் கேப்டன் முகமது யூசுப், முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஆயுள்காலத் தடையை விலக்கிக் கொண்டதாக அந்தர் பல்டி அடித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 

இதில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி ஆகிய அனைத்திலும் பாகிஸ்தான் தோற்றது. இதைத்தொடர்ந்து 6 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.
 
இதன்படி கேப்டன் முகமது யூசுப், முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் ஆகியோருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. 

முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் வேகப்பந்து வீரர் நவீத்ரானா ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும் பந்தை சேதப்படுத்திய அப்ரிடி, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கமரன் அக்மல், உமர் அக்மல் ஆகியோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
 
இந்த முடிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் பல்டி அடித்து யூசுப், யூனுஸ்கானுக்கு ஆயுட்கால தடை இல்லை என்று அறிவித்துள்ளது.
 
இது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ் பட் கூறும் போது யூசுப், யூனுஸ்கானுக்கு ஆயுட்கால தடை இல்லை. இருவரும் தேசிய அணிக்கு எந்த நேரத்திலும் தேர்வு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும், என்றார்.



Related Sports News:

India And Pakistan Pitted Together In Hockey World Cup
Pakistan Sheds To Step Into 21st Century