மும்பை: இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட மாட்டார்கள். இதுதொடர்பாக 11 வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆட்சேபனை இல்லை சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்த 3வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின்போது பாகிஸ்தான் வீரர்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு விட்டனர். இதனால் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், வீரர்களும், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் ஐபிஎல்லின் போக்கை கடுமையாக சாடினார். இது கிரிக்கெட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் அவர் வர்ணித்தார்.
அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கானும் ஐபிஎல் போக்கைக் கண்டித்திருந்தார்.
தாறுமாறாக வந்த விமர்சனங்களால் சுதாரித்துக் கொண்ட ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி, பாகிஸ்தான் வீரர்களை அணிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் தற்போது தங்களது வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளே எங்களுக்கு வேண்டாம்... எங்களை யாரும் ஏலத்தில் எடுக்கவும் வேண்டாம் என்று பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டது பாகிஸ்தான்.
Related Sports News:
ஐபிஎல்லுக்கு தடை விதிக்க வேண்டும்! - நிதீஷ் குமார்ஐசிசி ரேங்க்...கம்பீர் தொடர்ந்து முதலிடம்சாம்பியன் டிராபி இன்று தொடக்கம்-இலங்கை-தென் ஆப்ரிக்கா பலப்பரீடசை