Home Tamil News International News ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகள் வாபஸ்! - ஒபாமா
Illinois Institute Of Technology
  

Latest News:

ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகள் வாபஸ்! - ஒபாமா

March 09, 2010 13:33:33

வாஷிங்டன்: ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகள் படிப்படியாக  வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

 
ஈராக்கில் தற்போது அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அங்கிருந்து அவை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஈராக்கில் பொதுத் தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்து இருந்தார். இதற்கிடையே அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த வன்முறை சம்பவங்களுக்கு இடையே தேர்தல் நடந்தது.
 
வன்முறையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. ஈராக்கில் நடைபெற்ற தேர்தல் குறித்து அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்தார். 

அப்போது, "பல வன்முறை சம்பவங்களுக்கு இடையே அங்கு தேர்தல் நடைபெற்றது ஒரு மைல்கல் ஆகும்.
 
தற்போது தேர்தல் நடைபெற்று விட்டதால் ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப் பட்டு விட்டதாக கருதுகிறேன். எனவே அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள். 

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்ப பெறப்படுவார்கள். இருந் தாலும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும்Ó என்றார்.
 
இதுகுறித்து ஈராக்குக்கான அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ராய் ஒடியர்னோ ஒரு டெலிவிஷ னுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ஈராக்கில் அமெரிக்க ராணுவம் தனது வீரர்களை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
 
ஆகஸ்டு மாத இறுதிக்குள் தீவிரவாதிகளுடன் போரில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். அவர்கள் தவிர பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்", என்றார்.


Related InterNational News
:

இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்!
Afghan Taliban Refutes U.S. Claim
Obama Assures Manmohan On Nuclear Agreement