வாஷிங்டன்: இனி அந்நிய நிறுவனங்களுக்கு அவுட் ஸோர்ஸிங் பணிகளைத் தரும் அமெரிக்க கம்பெனிகளுக்கு வரிச் சலுகையே கிடையாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
இது பிபிஓ தொழிலை மட்டுமே நம்பியுள்ள இந்திய ஐடி துறைக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டதில் நிகழ்த்திய உரையில் பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அடியோடு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுக்காக பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, வங்கித் துறை, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருமளவு குறையும்.
அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
Related International News:Obama Assures Manmohan On Nuclear Agreementஅல்கொய்தாவை முற்றிலும் ஒழித்தே தீருவேன்!- ஒபாமா சபதம்Obama Is Not Considerate On China: Dalai Lama