திருப்பதி: தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகளும் பந்த் அறிவித்து இன்றோடு 10 நாள்கள் ஆகிவிட்டது.
தொடர்ந்து 10 நாள்கள் மாநிலமே முடங்கிப் போய்விட்டதால், மக்களின் வாழ்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனித் தெலுங்கானா அறிவிப்பை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும் என, ராயலசீமா, கடலோர ஆந்திராவின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாணவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
10 நாள்களாக லாரிகள் - பஸ்கள் எதுவும் ஓடாததால் அப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
பல இடங்களில் ரெயில் மறியல் நடப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி, அனந்தபுரம், கர்னூல், நெல்லூர், விஜயவாடா ஆகிய நகரங்கள் கடந்த 10 நாட்களாக வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மக்கள் நெரிசல் மிகுந்த விசாகப்பட்டினம் நகரம் தொடர் போராட்டம் காரணமாக களை இழந்து காணப்படுகிறது. நகரில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்துவிட்டு சிரஞ்சீவி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
Related National News:
பச்சோந்தியே வெட்கப்படும் அளவு சுயநலவாதி சிரஞ்சீவி! - சந்திரசேகர ராவ்சென்னை - டெல்லி விமானத்தில் கோளாறு: 138 பேர் தப்பினர்எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி!