மும்பை:நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி வெங்கட்ராமன் இன்று சென்னை வருகிறார். மார்கழி சீஸன் கர்நாடக சங்கீத கச்சேரிகளை இன்று மாலை கண்டு ரசிக்கிறார்.
தமிழகத்தில் பிறந்து அமெரிக்க பிரஜையாகி இருக்கும் விஞ்ஞானி வெங்கட்ராமன் வேதியியல் துறையில் சாதனை படைத்ததற்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். தனது உறவினர்கள், நண்பர்களை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் மும்பை வந்துள்ளார்.
தனது மகன் ராமன் மற்றும் மருமகள் மெலிஸ்ஸா ரியர்டன் ஆகியோருடன் அவர் வந்துள்ளார்.
வெங்கட்ராமனின் மகன், மருமகள் இருவரும் மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களின் இசை நிகழ்ச்சி தென் மும்பை கலையரங்கு ஒன்றில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய வெங்கட்ராமனின் மகன் ராமன், "என் தந்தை மும்பையில் தங்கி இருந்தபோது உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பார். திங்கட்கிழமை சென்னை புறப்பட்டுச் செல்வார். சென்னையில் ஆண்டுதோறும் நடந்து வரும் கர்நாடக சங்கீத விழாவில் அவர் பங்கேற்பார்" என்றார்.
Related Tamil Nadu News:
கருணாநிதிக்கு 'தமிழ் தலைமகன்' விருது வழங்கப்பட்டது!புதுப்பொலிவுடன் மெரீனா... திறந்து வைத்தார் முதல்வர்!வந்தவாசி, திருச்செந்தூரில் நாளை வாக்கு எண்ணிக்கை!