Home Tamil News Sri Lanka News ஆய்வு செய்ய சிறப்புத் தூதர் வேண்டாம்: இந்தியாவிடம் இலங்கை வலியுறுத்தல்
  

Latest News:

ஆய்வு செய்ய சிறப்புத் தூதர் வேண்டாம்: இந்தியாவிடம் இலங்கை வலியுறுத்தல்

July 20, 2010 09:29:50
இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே அது தொடர்பாக ஆய்வுசெய்ய சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு பணி தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவில் இருந்து சிறப்புத்தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகனுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதனால் சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Srilanka News:

Close the srilankan embassy: vaiko
Wimal Weerawansa starts his indefinite fast - Srilanka News
America supports UN in Lanka Issue - Srilanka News Online