Home Tamil News National News ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும்! - பாஜக தலைவர் கட்கரி
Illinois Institute Of Technology
  

Latest News:

ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும்! - பாஜக தலைவர் கட்கரி

February 19, 2010 10:49:29

இந்தூர்: இந்துக்களின் உணர்வுகளை ஏற்று ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் பெருந்தன்மையோடு உதவ வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றும்போது அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.


ராமர் கோயில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய நிலத்தை முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தால் அருகில் பெரிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "அயோத்தியில் மாபெரும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வுகாண்பதில் எமது கட்சிக்கு உடன்பாடு இல்லை. நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டால் ஒருவர் வெற்றி பெறுவதும் மற்றொருவர் தோற்பதும் உறுதி. அது தேவையில்லை. 

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்பது தவறான கருத்து. முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக இருந்தால் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக ஆக்கியிருப்பார்களா?

ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தினர் ஒரு மனதாக முடிவெடுத்து கோயில் கட்டுவதற்கு உதவினால் அது இந்து முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும் என்றார்.

Related National News:

Raghavendra Brindavanam Temple Press Meet

காஞ்சி அருகே கோயிலில் கொலை, கொள்ளை!
இன்று திருவண்ணாமலையில் மகா தீபம்
Comments
  • Posted by  irshad
    2010-02-20 09:42
    முதலில் barபர் மசுதியய் கட்ட்டுவொம்