Home Tamil News Entertainment News நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் வீடியோ... - நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்!
Illinois Institute Of Technology
  

Latest News:

நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் வீடியோ... - நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்!

March 04, 2010 08:45:00


நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்!

நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுள்ள நிதியானந்தாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மார்ப்பிங் செய்யப்பட்டவை என்று நித்யானந்தா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 நித்யானந்தா தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தோ இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. 

அந்த அறிக்கை: 

மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். 

விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். 

எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 

பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை" என்று கூறப்பட்டுள்ளது.


Related Entertainment News:

நித்தியானந்த சாமி - நடிகை ரஞ்சிதா காம லீலை வீடியோ பரபரப்பு
நித்தியானந்தர் ஆசிரமங்கள் சூறை!
ஆந்திர கவர்னர் மீது அதிர வைக்கும் செக்ஸ் புகார்!
Comments
  • Posted by  hari
    2010-05-20 23:26
    hayhari
  • Posted by  sara
    2010-04-06 10:05
  • Posted by  amalraj
    2010-03-05 03:05
    good good