Home Tamil News National News கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லையாம்! - சொல்பவர் நித்யானந்தா
Illinois Institute Of Technology
  

Latest News:

கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லையாம்! - சொல்பவர் நித்யானந்தா

March 11, 2010 17:30:30

தன்மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லை என்று நித்யானந்தன் கூறியுள்ளார்.


வாரணாசி கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நித்யானந்தாவை, டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் விஜய மல்கோத்ரா சந்தித்து பேட்டி கண்டார்.

அதன் விவரம் :
 
கேள்வி: பெங்களூரில் உள்ள ஆசிரம கட்டிடம் இருக்குமிடம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதா?
 
பதில்: வள்ளல் பரம்பரையைச் சேர்ந்த பிரதாப் ராவ், ஜீவன்ராவ், கேசவ் ராவ் ஆகிய 3 சகோதரர்கள் ஆசிரமத்துக்கு நன்கொடையாக வழங்கிய இடம் அது. 2003-ம் ஆண்டு ஆசிரமத்தின் மீது கொண்ட பற்று காரணமாக இந்த இடத்தை வழங்கினார்கள். இதற்கான பத்திர பதிவுகள் அனைத்தும் சட்ட ரீதியாக செய்யப்பட்டுள்ளன.

கேள்வி: உங்கள் சொத்து தொடர்பான எல்லா விவரங்களையும் வெப்சைட்டில் வெளியிடுவீர்களா?
 
பதில்: நிச்சயமாக அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன்.
 
கேள்வி: ஆசிரமத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் மர்மமாக இறந்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளதே?
 
பதில்: கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறி விழுந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
கேள்வி: உங்கள் மீது தமிழக போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார்களே?
 
பதில்: எனக்கு எதிராக கிளப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதில் எள் அளவும் உண்மை இல்லை.
 
எந்தப் பெண்ணும் என்னால் பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் சொல்லவில்லை.
 
கேள்வி: உங்கள் ஆசிரமத்தில் இளம் சிறுவர்களை அடைத்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே?
 
பதில்: எனது ஆசிரமத்தில் தங்கி உள்ள அனைவரும் அவர்களுடைய விருப்பப்படிதான் தங்கி இருக்கிறார்கள். கட்டாயப்படுத்தி யாரும் தங்க வைக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் ஆசிரமத்துக்கு வந்து விசாரிக்கலாம்.


Related National News:

அமெரிக்காவுக்கு ஓடிவிட்டாரா ரஞ்சிதா?
ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய திட்டமிட்ட நித்யானந்தா!
நித்யானந்தா மீது கொலை மிரட்டல் வழக்கு!
Comments
  • Posted by  MK
    2010-03-11 08:34
    அந்த காணொளியை காண நேர்ந்தேன்.. பேட்டி கண்டவர் தன்னை ஒரு Independent Researcher என்று மட்டும் சொல்லவில்லை... நித்யானந்தரிடம் தியான பாடம் கற்ற மாணவர் என்றும் தெரிவித்திருந்தார்... மாத்திரமல்லாமல் கேள்விகளை கேட்கும்போது நடுநிலையோடு கேட்கவில்லை. அதுவும் தவிர நடிகை ரஞ்சிதா பற்றி எந்த விவரமோ விளக்கமோ தரவில்லை... ஒட்டுமொத்ததில் சாமியார் வசமாக மாட்டிக்கொண்டதாகவே தெரிகிறது..!!