இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.
வெளியுறவுச் செயலாளர் ஆன பின் அவர் இலங்கைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அவர் ஏற்கனவே அந் நாட்டில் இந்தியத் தூதராக இருந்துள்ளார்.
புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின் நிருபமா அங்கு செல்வது இதுவே முதல் முறை.
இலங்கை இனப்பிரச்னை விவகாரத்தில் தீர்க்கமான சில கொள்கை முடிவுகள் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கை சூசகமாக தெரிவிக்க வேண்டும் என இந்தியா கருதுவதாகவும், புதுடெல்லியின் அந்த நிலைப்பாட்டை நிருபமா ராவ் தனது கொழும்பு விஜயத்தின் போது இங்குள்ள அதிகார வர்க்கத்திடம் அழுத்தம், திருத்தமாகத் தெரியப்படுத்துவார் எனவும் கூறபடுகிறது.
தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கையை இந்தியா நெருக்கி வரும் நிலையில் நிருபமாவின் இந்தப் பயணம் மிகுந்த முக்கிய்ததுவம் பெறுகிறது.
Related Srilanka News:
Raja Pakse Visits
Tamils In KilinochchiRaja Pakse Visits
Tirupathi TomorrowM. K. Stalin Visits USA
For Revamping TN