மதுரை: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள இந்த நேரத்தில், பாராளுமன்றத்தில் விரைவில் எனது தமிழ்குரல் ஒலிக்கும் என்று, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சி காரணமாக டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளவை போன்று நவீன வசதிகளுடன் கூடிய இலவச கழிப்பறைகள் மதுரையில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
தற்போது முதற்கட்டமாக 10 நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய மந்திரி மு.க.அழகிரி பிறந்த தினத்தையொட்டி இந்த புதிய நவீன இலவச கழிப்பறைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மு.க.அழகிரியின் முன்னிலையில் நேற்று இந்த 10 நவீன கழிப்பறைகளையும் அமைச்சர்களும், தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் அடுத்தடுத்து திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் மு.க.அழகிரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியது:
நான் மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறேன். ஏராளமான உதவிகளை செய்து வருகிறேன். தற்போது ஏழை எளிய மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக டெல்லியில் இருப்பதை போன்று நவீன கழிப்பறைகள் மதுரை மாநகரில் 10 இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு உள்ளன. இது போன்ற சேவைகள் தொடரும்.
உலக செம்மொழி மாநாடு நடைபெறுகின்ற இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் நிச்சயம் என்னுடைய தமிழ்க் குரல் ஒலிக்கும். தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழில் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். பாராளுமன்றத்தில் எப்போதும் என்னுடைய செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, என்றார்.
Related Tamil Nadu News:
Minister MK Azhagiri Assures Improvement In Fertilizersமு.க.அழகிரி பேரவை:திமுக கடும் எச்சரிக்கைMK Azhagiri Inaugrates SICCI Nineteenth Annual General Meeting