Home Tamil News National News சிவசங்கர மேனன் புதிய பாதுகாப்புச் செயலாளர்!
  

Latest News:

சிவசங்கர மேனன் புதிய பாதுகாப்புச் செயலாளர்!

January 21, 2010 19:51:26

டெல்லி: புதிய தேசிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இது வரை அந்தப் பொறுப்பில் இருந்து வந்த எம்.கே.நாராயணன் மேற்கு வங்காள கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அவருடைய இடத்துக்கு சிவசங்கர் மேனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேனன் கடந்த ஆண்டு ஜூலையில் ஓய்வுபெறும் முன்பு மூன்று ஆண்டுகள் வெளியுறவுத் துறைச் செயலர் பதவியில் இருந்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மேனன் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related National News:

Health Secretary Urges Students To Complain
AIADMK Secretary Selection In 5 Phases: Jayalalitha