Home Tamil News Tamil Nadu News வந்தவாசி - திருச்செந்தூர் இடைத்தேர்தல் - திமுக அமோக வெற்றி


Illinois Institute Of Technology

Latest News:

வந்தவாசி - திருச்செந்தூர் இடைத்தேர்தல் - திமுக அமோக வெற்றி

December 23, 2009 17:11:29
திருச்செந்தூர் - வந்தவாசி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் தி்முக அமோக வெற்றி பெற்றது.

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு இரு தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. திருச்செந்தூர் தொகுதி ஓட்டுக்கள் ஆதித்தனார் கல்லூரியிலும், வந்தவாசி தொகுதி ஓட்டுக்கள் செய்யாறு அரசு கலைக்கல்லூரியிலும் எண்ணப்பட்டன.

14 சுற்று ஓட்டுக்களும் எண்ணி முடிக்கப்பட்ட போது அனிதா ராதாகிருஷ்ணன் 46,861 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 75,223 ஓட்டுக்கள் குவித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் நாராயணனுக்கு 28,362 ஓட்டுக்கள் கிடைத்திருந்தன.
 
வந்தவாசி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை முடிவில்  திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் 72 ஆயிரத்து 312 ஓட்டுக்கள் பெற்று முன்னணியில் இருந்தார்.
 
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முனுசாமிக்கு 37 ஆயிரத்து 044 ஓட்டுக்கள் கிடைத்து இருந்தது.
 
தே.மு.தி.க.வுக்கு இரு தொகுதிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுக்கள் கிடைக்கவில்லை. மிகவும் குறைவான ஓட்டுக்களையே விஜயகாந்த் கட்சி பெற்றது. இரு தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு டெபாசிட் தொகை கிடைக்கவில்லை.
 
வந்தவாசி தொகுதியை தி.மு.க. தக்க வைத்துள்ளது. திருச்செந்தூர் தொகுதியை அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

Related Tamil Nadu News:

வந்தவாசி - திருச்செந்தூரில் திமுக முன்னிலை!
பென்னாகரம் தொகுதிக்கு ஜன 20-ல் இடைத்தேர்தல்
கூடவே பிறந்த பிரச்சினை! - காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி பேச்சு