ராஜபக்சே கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தலில் ஓட்டுக் கேட்கக் கூட போக முடியவில்லையாம். இது எதிரணியைச் சேர்ந்த பொன்சேகாவுக்கு மிகவும் சாதமாக மாறி வருகிறது.
இன்னொரு பக்கம் தமிழர் அமைப்புகளில் பெரும்பாலானவை பொன்சேகாவையே ஆதரிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொன்சேகாவுக்கு ஆதரவு தந்துவிட்டதால், மகிந்தவின் கவலை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் காரணம் இல்லாமல் கோபப்படுவதாக சிங்கள உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள். அவரை நன்கு ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ராஜபக்சேக்கு ஆலோசனை கூற 50 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம். அரசு நிர்வாகத்தை நடத்த அவருக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Srilanka News:
எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுக் கேட்கும் ராஜபக்சே'ராஜபக்சே கால்பட்டதால்தான் ஆந்திராவுக்கு இவ்வளவு சோதனை!'RajaPakse Withdraws From Conducting Elections