Home Tamil News Tamil Nadu News மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் இனி சென்னை ஐகோர்ட்!


Illinois Institute Of Technology

Latest News:

மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் இனி சென்னை ஐகோர்ட்!

January 31, 2010 11:01:09

சென்னை: முதல்வர் கருணாநிதியின் முயற்சியின் பேரில், மெட்ராஸ் ஐகோர்ட் என்ற பெயர் சென்னை உயர் நீதிமன்றம் (Chennai High Court) என்று பெயர் மாற்றம் பெறுகிறது.

இதற்கான தனி சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது.

வெள்ளையர்கள் காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்ஸியாக இருந்தபோது மெட்ராஸ் ஹைகோர்ட் உருவானது. பின்னர் மாநிலங்கல் பிரிக்கப்பட்டு, மெட்ராஸ் தனி மாநிலமானது.

அதுவே பின்னர் அண்ணாவின் காலத்தில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

அதுபோல மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றம் செய்ய முதல்வர் கருணாநிதிதான் சட்டம் கொண்டு வந்தார். இப்போது சென்னை என்ற பெயரிலேயே அனைத்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், ஐகோர்ட்டு மட்டும் மெட்ராஸ் ஐகோர்ட்டு என்ற பெயரில் இயங்குகிறது.

மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று முழுமையாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு மெட்ராஸ் ஐகோர்ட்டு என்பது சென்னை ஐகோர்ட்டு (தமிழில் சென்னை உயர்நீதிமன்றம்) என்று அழைக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக உள்ளார். மத்திய அரசிடம் இது குறித்து வலியுறுத்தி வருகிறார்.

இதைத் தொடர்ந்து மெட்ராஸ் ஐகோர்ட்டு என்ற பெயரை சென்னை ஐகோர்ட்டு என்று மாற்றும் வேலை தீவிரமாக நடந்து வருவதாக மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை தெரிவித்து உள்ளது.

மேலும், பம்பாய் ஐகோர்ட்டு என்ற பெயரை மும்பை ஐகோர்ட்டு என்றும், கல்கத்தா ஐகோர்ட்டை, கொல்கத்தா ஐகோர்ட்டு என்றும், கவுகாத்தி ஐகோர்ட்டு என்ற பெயரை குவாஹாத்தி ஐகோர்ட்டு என்றும் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

Related TamilNadu News:

Karunanidhi Surprised With Supreme Court's Move
Bomb Blast Rocks Peshawar Court
கடலூர் கோர்ட் வாளகத்தில் பரபரப்பு - போலீஸ் பிஸ்டல் வெடித்தது....