ஜெர்மனியின் ஏர்லைன் லுப்தான்சா விமான நிறுவனத்தின் மொத்த விமானிகளும் 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஸ்ட்ரைக்கால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஜெர்மனியில் ஏர்லைன் லுப்தான்சா விமான நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. 43 மில்லியன் பயணிகளை சுமந்து செல்லும், உலகிலேயே இரண்டாவது பெரிய விமான நிறுவனம் இது. இதில் சுமார் 4 ஆயிரம் விமானிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி 4 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 3 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. மேலும் பல விமானங்களின் போக்குவரத்து தாமதமாகவும் நடைபெறுகிறது. எனவே பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்த போராட்டம் வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுவதால் இதில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் வாபஸ் பெற்று வேறு விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
Related InterNational News:
Air India Pays Initiatives To Pilots To
Avert StrikePilots Resume Duty; Strike Called OffAir India Strike Continues; 20 Flights
Cancelled