Home Tamil News Sports News தோல்விக்கு மோசமான பந்துவீச்சே காரணம்!: தோனி
  

Latest News:

தோல்விக்கு மோசமான பந்துவீச்சே காரணம்!: தோனி

July 23, 2010 17:07:42
இலங்கையுடனான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு மோசமான பந்துவீச்சே காரணம் என்று தோனி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

'ஸ்ரீசாந்த், ஜாகீர்கான் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லாததும், அனுபவம் இல்லாத பந்துவீச்சும், பேட்ஸ்மென்கள் நிலைத்து நின்று ஆடாததும் தோல்விக்கான காரணங்கள்.

காலே மைதானத்திற்கு ஏற்ற அனுபவம் மிக்க பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. சேவாக் பேட்டிங்களிலும், அறிமுக வீரர் அபிமன்யு மிதுன் பந்துவீச்சிலும் நன்றாகச் செயல்பட்டனர்.

காலே டெஸ்டில் பல தவறுகளை நாங்கள் இழைத்தோம். இப்போது பாடம் கற்றுக்கொண்டோம். அடுத்த டெஸ்டில் இந்தத் தவறுகளை செய்ய மாட்டோம்.

இலங்கை அணியின் முரளிதரன் மற்றும் மலிங்காவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் எங்களால் நிலைத்து நின்று ஆட முடியாமல் போயிற்று' என்று தோனி கூறினார்.

-சிவாஜி டிவி

Related Sports News:

Sri Lanka win by ten wickets - Latest Cricket News
Muralitharan 800th wicket in farewell Test - Sports News in Tamil
Indian Cricket Team moved to Lanka from Chennai - Cricket News