Home Tamil News Entertainment News இப்போது என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்?
Illinois Institute Of Technology
  

Latest News:

இப்போது என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்?

March 04, 2010 13:00:54


நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. 

"இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள்" என்று கொந்தளித்தார் நடிகர் சூர்யா.  

"பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்" என்றார் விஜயகுமார்.  

நடிகர்-நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தினமலர் பத்திரிகை இதில் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. 

இப்போது ரஞ்சிதா விவகராம் வெளியாகி, சினிமாக்காரர்களின் யோக்கியதையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

"சுவாமி நித்யானந்தா சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. 

நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா? 

இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, "அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்," என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்..." என்று அந்தப் பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

Related Entertainment News:

Vivek, Sathyaraj Et Al @ Artistes Remonstration Part II
Bhuvaneswari Reveals Top Actresses List; Who's Next?
Bhuvaneswari Appeals For Bail

Comments
  • Posted by  BHARATHI
    2010-03-06 05:33
    ஏக்ஷ்செல்லென்ட் excellent this is true...............,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  • Posted by  V.JEYARAMAKRISHNAN
    2010-03-04 11:36
    it is the govt to decide the verdict of the people.