மும்பை: மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐபிஎல் -3 டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றது.
மும்பையில் தொடங்கிய ஐபிஎல் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின.
டெக்கான் டாஸ் வென்று கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது. கொல்கத்தா அணியில் மனோஜ் திவாரி, கங்குலி முதல் ஓவரிலேயேரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாயினர்.
இதனால் கொல்கத்தா அணிக்கு தொடக்க மேசரிவாக இருந்தது. பின்னர் ஹாட்ஜும், புஜாராவும் மெதுவாக ஆடிரன் சேர்த்தனர். புஜாரா 10 ரன்கள் எடுத்திருந்த போது ஆர். பி. சிங் வீசிய பந் தில் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அவரது ஸ்கோரில் 2 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் ஹாட்ஜ் 13 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்கரன் சிங் பந்து வீச்சில் அவுட்டானார்.
பின்னர் ஒவைஸ் ஷுவும், மாத்யூஸும் நின்று விளையாடி ஸ்கோரை வெகு வாக உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
ஷு 46 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
அதேபோல் மாத்யூஸ் 46 பந்துகளில் 65 எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
பின்னர் விளையாடிய டெக்கான் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.
ஸ்கோர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 20 ஓவர்களில் 161-4 (ஷு 58, மாத்யூஸ் 65 இருவரும் நாட்- அவுட், வாஸ் 2- 22)
டெக்கான் 20 ஓவர்களில் 150- 7 (கில்கிறிஸ்ட் 54, வி வி எ ஸ் லக்ஷ்மண் 22, லாங்க்வெல்ட் 2- 26).
இன்றைய போட்டிகள்: மும்பை இண்டியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை, பிற்பகல் 3)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் (மொஹாலி, இரவு 8)
Related Sports News:
ஐபிஎல்
இன்று கோலாகல துவக்கம்!
தீபிகா படுகோன் நடனத்துடன் துவங்கும்
ஐபிஎல் போட்டிகள்!ஐநா
நல்லெண்ணத் தூதர் சச்சின்!