சென்னை: இடைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும், நிருபர்களை அறிவாலயத்தில் சந்தித்தார் முதல்வர் கருணாநிதி.
அப்போது இந்த இடைத் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு கருணாநிதி அளித் பதில்களும்
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து...?மகத்தான வெற்றியை இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. வாக்களித்த மக்களுக்கு-மகத்தான வெற்றியை இந்த கூட்டணிக்கு வழங்கிய மக்களுக்கு தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில் அதிக வாக்காளர்கள் தாமாகவே வந்து ஓட்டு போட்டிருக்கிறார்களே? தி.மு.க. அரசின் சாதனைகள், மக்கள் தொடர்பு, மக்கள் பிரச்சினையில் காட்டுகிற அக்கறை ஆகியவை காரணமாக மக்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களித்திருக்கிறார்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன் போல் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு வருவார்களா? வந்தால் உங்களுக்கே தெரியும்.
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயம் ஆக்கும் சட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா?அந்த கருத்தில் இருவேறு அபிப்பிராயங்கள் தமிழக தலைவர்களால் சொல்லப்படுகிறது. பழுத்து வந்தபிறகு என் கருத்தை சொல்கிறேன்.
Related Tamil Nadu News:
வந்தவாசி - திருச்செந்தூர் இடைத்தேர்தல் - திமுக அமோக வெற்றிவந்தவாசி - திருச்செந்தூரில் திமுக முன்னிலை!பென்னாகரம் தொகுதிக்கு ஜன 20-ல் இடைத்தேர்தல்