Home Tamil News Tamil Nadu News காயமடைந்த தொழிலாளர்களுக்கு கருணாநிதி நேரில் ஆறுதல்!
  

Latest News:

காயமடைந்த தொழிலாளர்களுக்கு கருணாநிதி நேரில் ஆறுதல்!

January 22, 2010 18:56:31

புதிய சட்டசபை வளாக கட்டுமானப் பணிகளின்போது காயமடைந்த ஊழியர்களை முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். 


புதிய சட்டசபை கட்டிடம் கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் பணி நேற்று நடந்து கொண்டிருந்தது. 

30 அடி உயர சாரத்தில் நின்று ஊழியர்கள் வேலை செய்த கொண்டிருந்தனர்.
அப்போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 9 ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் பாசுல்லா (வயது 24), கிருஷ்ண மங்கன் (25) ஆகிய ஊழியர்களுக்கு காயம் அதிகமாக இருந்தது. எனவே அவர்கள் மட்டும் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் திரும்பினார்கள்.

சிகிச்சையில் இருக்கும் இருவரையும் முதல்வர் கருணாநிதி இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ் ஆகியவற்றையும் வழங்கினார்.

Related TamilNadu News:

Karunanidhi Urges PM To Pressurize Sri Lanka

Karunanidhi's Subterfuge Condemnation On Vikatan
Karunanidhi Refutes Jayalalitha's Allegation