Home Tamil News Entertainment News விருதுக்குரிய சின்னத் திரைக் கலைஞர்களைத் தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து தலைமையில் குழு


Illinois Institute Of Technology

Latest News:

விருதுக்குரிய சின்னத் திரைக் கலைஞர்களைத் தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து தலைமையில் குழு

February 03, 2010 12:13:37
சென்னை : விருதுக்கு தகுதியான சின்னத்திரைக் கலைஞர்களைத் தேர்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் தனி குழு அமைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
சின்னத்திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் திட்டம் 2006-ல் இந்த அரசு அமைந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்கனவே 2006-ம் ஆண்டிற்கான சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இதனைத் தொடர்ந்து 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு சின்னத்திரைக்கான சிறந்த தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர் விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட ஓய்வு பெற்ற நீதிபதி மு.மருதமுத்து தலைமையில் இயக்குனர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி. சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜசேகர் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர், செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவினை அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
 
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Entertainment News:

Rajini Kamal Speech Video At TamilNadu State Award - First On Net

ரஜினி - கமலுக்கு நாளை விருது வழங்குகிறார் முதல்வர்!
தமன்னாவுக்கு சாந்தாராம் விருது!