அண்ணா நினைவு நாளையொட்டி முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
பேரரறிஞர் அண்ணாவின் 41வது நினைவு நாள் இனறு (பிப்ரவரி 3ம்தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் சேப்பாக்கம் தொகுதி அலுவலகத்தில் இருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
பின்னர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைதி பேரணியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
அதிமுகவினர்...அண்ணாவின் 41 வது நினைவு நாளையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்
Related TamilNadu News:
Annadurai's Golden SpeechC.N. Anna Durai , A predictor of fortune indeed
Perarignar Anna Centenary Birthday- Photo Gallery