Home Tamil News Entertainment News 'என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார்' - பரபரப்பு கிளப்பும் கனகா


Illinois Institute Of Technology

Latest News:

'என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார்' - பரபரப்பு கிளப்பும் கனகா

February 08, 2010 08:53:43

சென்னை: என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறாரஎன்று நடிகை கனகா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.


நடிகை கனகா விவகாரம் தொடர்ந்து மர்மமாகவே நீடிக்கிறது.

சில ஆண்டுகளாக இருக்கிற இடமே தெரியாமல் இருந்த கனகா, 3 நாட்களுக்கு முன்பு திடீர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது: 

"கடந்த 2007-ம் ஆண்டில் முத்துக்குமார் என்பவருக்கும், எனக்கும் திருமணம் நடந்துவிட்டது. என் கணவர் முத்துக்குமார் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்தார்.

அவர் என்னுடன் 15 நாட்கள் தான் குடும்பம் நடத்தினார். அதன்பிறகு அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை யாராவது கடத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

இந்த நிலையில், சில தினங்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என் சொத்துக்களையெல்லாம் எழுதி கேட்கிறார்கள். கொடுக்கவில்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்கிறார்கள்..." என்றார். 

பேட்டி அளித்ததற்கு மறுநாள் நடிகை கனகா காணாமல் போய்விட்டார். அவருடைய வீடு பூட்டிக்கிடந்தது.

நேற்று அவர் மீண்டும் வந்தார். நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"எனக்கு கொலை மிரட்டல் வருவதால்தான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். அடிக்கடி இப்படி போய்விடுவேன்.

என் அப்பாவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மா உயிருடன் இருந்தபோதே எங்களுக்குள் உறவு இல்லை. இப்போது என்னை அவர் மீண்டும் பார்க்க விரும்புவதெல்லாம் என்னிடம் உள்ள சொத்துக்காகத்தான்.

இதற்கிடையில், என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார். நான் சம்மதிக்கவில்லை. அதனால், அவரும் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார்.

ஆவி அமுதாவுக்கு என் கணவர் முத்துக்குமாரை நன்றாக தெரியும். ஆனால், அவர் தெரியாது என்கிறார். இதில் இருந்தே என் கணவர் காணாமல் போனதற்கும், ஆவி அமுதாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன.." என்றாரக் கனகா.

Related Entertainment News:

நடிகை கனகா மீது மான நஷ்ட வழக்கு! - ஆவி அமுதா ஆவேசம்
நடிகை கனகா மாயம்... திடீர் பரபரப்பு!