Home Tamil News National News சிவசேனா குரங்குக் கூட்டம்! - காஜோல் காட்டம்
  

Latest News:

சிவசேனா குரங்குக் கூட்டம்! - காஜோல் காட்டம்

February 06, 2010 15:37:30

மும்பை: சிவசேனா ஒரு குரங்குக் கூட்டம். அவர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் எப்போதும் ஷாரூக்கனான் பக்கம்தான் என்று கூறினார் நடிகை காஜோல்.

 
மும்பையில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா அறிவித்தது. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கூறினார்.
 
இதையடுத்து ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா மிரட்டல் விடுத்தது. 'ஷாருக்கானுக்கு தேசப்பற்று இல்லை. அவர் இந்தியத் தாயின் மகனல்ல... பாகிஸ்தான் வீரர்களை ஆதரித்துப்பேசிய தற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று சிவசேனா எச்சரித்தது. ஷாருக்கான் படங்களை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்தது.
 
ஆனால் ஷாருக்கான் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். சிவசேனா போராட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தி நடிகர், நடிகைகள் தங்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவித்துள்ளனர். 'ஷாருக்கான் கருத்தில் எந்த தவறும் இல்ல' என்று நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் தனது முழு ஆதரவை ஷாரூக்கானுக்கு வழங்கியுள்ளார்.
 
நடிகை காஜோல், ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமின்றி சிவசேனா கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் இப்படி எழுதியுள்ளார்:

சிவசேனா கட்சி நமது நாட்டின் கோமாளிக் கூட்டமாக மாறியுள்ளது. அவர்கள் எப்போதும் வெறுப்பை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள். இதைத் தவிர ஒன்றும் அவர்களுக்குத் தெரியாது.
 
சிவசேனாவை குரங்குகளின் படை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு படையால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.
 
இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும்..."என்று பொரிந்து தள்ளியுள்ளார் காஜோல்.

Related National News:

சிவசேனா கருத்தை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்! - முதல்வர் கருணாநிதி

ஷாரூக்கும் அமீரும் '2 இடியட்ஸ்' - சிவ சேனா கடும் தாக்கு
மீண்டும் பரபரப்பு கிளப்பும் ஸ்ரீராம் சேனா