கொல்கத்தா ;மேற்கு வங்காள மாநிலத்தின் அசைக்க முடியாத முதல் அமைச்சராக இருந்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் உள்ள இவர் மூச்சு திணறல், சிறுநீரக பாதிப்பு, இதயக் கோளாறு என்று பல பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவரது சுவாசம் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, இயல்பாக அவருக்குத் தேவைப்படுவதில் 10 சதவிகிதம் மட்டுமே அவரால் சுவாசிக்க முடிகிறது. ரத்த ஓட்டத்தின் வேகம் அறவே குறைந்துள்ளதுடன், நுரையீரலும் இறுக்கமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இருந்த நிலையைவிட, தற்போது அவரது உடல்நிலை கவலை அளிப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் நரம்பியல் சிறப்பு மருத்துவரான ரஞ்சன் சர்க்கார் தலைமையிலான மருத்துவர் குழு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இருந்தும் ஜோதிபாசுவின் உடல்நிலை இடம் கொடுக்காத தால், அந்த சிகிச்சை பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
95 வயதாகும் ஜோதிபாசு, கடந்த 1-ந் தேதி முதல் கொல்கத்தாவில் உள்ள `அம்ரி' என்ற தனியார் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது
Related National News:
ஜோதிபாசு காலமானார்Health Conditions Critical For KCRRao In Critical Conditions; Doctors Advise To Withdraw