Home Tamil News Entertainment News இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறேன்! - ஜெயராம்


Illinois Institute Of Technology

Latest News:

இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறேன்! - ஜெயராம்

February 06, 2010 10:39:51

"தமிழ் தாய்மார்களை புண்படுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை. என் பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால், இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறேன்" என்று நடிகர் ஜெயராம், நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.


நடிகர் ஜெயராம் கேரளாவில் உள்ள ஏசியாநெட் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியின்போது, ஒரு கேள்விக்கு, "என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. எருமை போன்ற அவளை எப்படி சைட் அடிக்க முடியும்?" என்று பதில் கூறியிருந்தார்.

அவருடைய இந்த பேட்டி, தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்டு, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"என் அன்பு தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட ஜெயராம் எழுதும் விளக்க மடல். நான் கடந்த 23 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். இதுவரை மனம் அறிந்து நான் எவரையும் புண்படுத்தும் வகையில் எந்த வார்த்தையும் சொன்னதில்லை. நடந்து கொண்டதும் இல்லை.


அப்படி இருக்க, என்னை அமோகமாக வரவேற்று ஆதரித்த தமிழ் உள்ளங்களை நான் எந்த வகையிலாவது புண்படுத்துவேனா? அப்படி செய்தால், அது தாயை பழிப்பது போல் ஆகும் அல்லவா?

ஒரு ஜோக்குக்காக சொன்னேன்!


தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்னது, நான் செய்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து யதார்த்தமாக சொன்ன ஒரு 'ஜோக்.' கண்டிப்பாக அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு சொன்னது அல்ல. இது, என் மனசாட்சி மீது ஆணை.

இருப்பினும் இது ஏதோ ஒரு வகையில் தமிழ் உள்ளங்களை முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி, மன்னிப்பு கூறுகிறேன். தயவு செய்து இதை ஏற்றுக்கொண்டு உங்கள் மனதில் மீண்டும் எனக்கு இடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜெயராம் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.


Related TamilNadu News
:

ஜெயராம் வீடு-அலுவலகம் எரிப்பு... நாம் தமிழர் இயக்கத்தினர் கைது
தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய ஜெயராமுக்கு கடும் கண்டனம்
VFX Magic To Turn Kushbu And Jayaram As Teens

Comments
  • Posted by  ??????
    2010-02-06 02:56
    இவன் தமிழ் நாட்டில் இருந்தால் தான் தமிழன் என்பான். கேரளா சென்றால் மலையாளி என்பான். 1. முதலில் தமிழ்த்திரையுலகினர் முல்லைப் பெரியார் அணைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும். 2. மலையாள திரைப்படங்களில் தமிழர்கள் இழிவு செய்வது நிறுத்தப்படல் வேண்டும். 3. கேரளா ‍ - God's own Country => God's own STATE
  • Posted by  savukkadi savithiri
    2010-02-06 00:45
    வாய்க்கொழுப்பு என்பது இதுதானா