Home Tamil News National News டெல்லியில் ஜெயா... சோனியாவைச் சந்திக்கிறார்?


Illinois Institute Of Technology

Latest News:

டெல்லியில் ஜெயா... சோனியாவைச் சந்திக்கிறார்?

January 25, 2010 10:09:32

டெல்லி: தேர்தல் கமிஷன் வைர விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்றார்.


இந்த விழாவில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா நேற்று காலை 11 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவருடன் அவரது தோழி சசிகலா, உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகள் என 6 பேர் சென்றுள்ளனர்.

விமான நிலையத்திற்குள் செல்லும் முன் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில், 
"தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா என்னை தொலைபேசியில் அழைத்து விழாவில் பங்கேற்கவேண்டும் என அழைத்தார்.

இதை ஏற்று விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனநாயகம் நிலைபெற்று இருக்க தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானது.

எனவே புகழ்பெற்ற தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் கலந்து கொள்வது தார்மீக கடமையாக கருதுகிறேன்.  

சோனியாவுடன் சந்திப்பு?

அப்போது நிருபர்கள், 'டெல்லியில் நீங்கள் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?' என கேட்டனர்.

இதற்கு ஜெயலலிதா, 'நீங்கள் மனதில் கற்பனை செய்து கொண்டு கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை' என்றார். 

தனி விமானத்தில் சென்ற ஜெயலலிதா பகல் 2 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை அடைந்தார். அவரை எம்.பி.க்கள் தம்பிதுரை, டாக்டர் மைத்ரேயன், திருப்பூர் சிவசாமி, திருச்சி குமார் மற்றும் பலர் வரவேற்றனர்.

ஜெயலலிதாவை சந்தித்த நிருபர்கள், 'உங்களது டெல்லி வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், 'இது குறித்து நான் இப்போது ஒன்றும் சொல்ல இயலாது. நாளை உங்களை (நிருபர்கள்) சந்திக்கிறேன்' என்று கூறியவர், ஓய்வெடுக்க தனது பண்ணை இல்லம் சென்றார்.

Related National News:

மக்கள் நம்ப மாட்டார்கள்! - ஜெ
ஆண்டவன்தான் நாட்டை காப்பாத்தணும்! - ஜெ
Karunanidhi Is Selfish: Jayalalitha