Home Tamil News National News மகளிர் மசோதா அமலுக்கு வர 2 1/2 ஆண்டுகள் ஆகும்! - வீரப்ப மொய்லி
Illinois Institute Of Technology
  

Latest News:

மகளிர் மசோதா அமலுக்கு வர 2 1/2 ஆண்டுகள் ஆகும்! - வீரப்ப மொய்லி

March 11, 2010 19:05:51

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா அமலுக்கு வர குறைந்தது 2 1/2 ஆண்டுகள் ஆகும் என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.


பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபையில் செவ்வாய்க்கிழமை நிறை வேற்றப்பட்டது.
 
அடுத்து பெண்கள் மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். வருகிற 15 அல்லது 16-ந்தேதி மக்களவையில் பெண்கள் மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
 
இதற்கிடையே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட திருத்தம் எப்போது முழுமையாக நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

பெண்கள் மசோதா மேல்- சபையில் நிறைவேறிவிட்டது. மக்களவையில் இனி நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு ஜனாதிபதி ஒப்புதலுக்காக இந்த சட்ட திருத்தம் அனுப்பப்படும்.
 
அதனைத் தொடர்ந்து இந்த சட்டதிருத்த மசோதா எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்படும். மாநில சட்டசபைகளில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகே பெண்கள் மசோதா அமலுக்கு வரும். அதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகிவிடும்.
 
மாநில சட்டசபையில் முறைப்படி ஒப்புதல் பெறுவதற்கு மட்டும் 9 மாதங்கள் தேவைப்படும். மற்றும் ஏராளமான சட்ட நடைமுறைகளை அரசு பின்பற்ற வேண்டியதுள்ளது. எனவே குறைந்த பட்சம் 2 1/2 ஆண்டுகளாகும்.
 
மாநில சட்டசபைகளில் மொத்தம் 4109 இடங்கள் உள்ளன. அதில் 1370 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
 
சட்டவடிவுக்கு வந்ததும் 2014 பாராளுமன்றத் தேர்தலில் பெண்கள் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று நம்புகிறேன்..." என்றார்.

Related National News:

மகளிர் மசோதா... மக்களவையில் பெரும் அமளி!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா... வாக்கெடுப்பு தள்ளி வைப்பு!
 
Comments
  • Posted by  M.Mathuram Brighton
    2010-03-14 12:10
    பாரதி கண்ட கனவு நிறைவேறுகிறது "சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி‍‍‍‍‍" ‍மகாகவி பாரதி.